Saturday, June 24, 2006

பல்லவியும் சரணமும் II - பதிவு 6

சில பழைய பாடல்களின் சரணங்கள் கீழே. பல்லவியையும், (முடிந்தால் திரைப்படத்தையும்) கண்டு பிடியுங்களேன்! விடைகள் நாளைய பதிவில், !!! தேவையிருந்தால் மட்டுமே!

ஓருவர் பின்னூட்டமிடும்போது, 4 அல்லது 5 சரணங்களுக்கான பல்லவிகளை மட்டும் பதியவும், அவருக்கு எல்லாவற்றுக்கும் விடை தெரிந்திருந்தாலும் கூட :-))

ஏனெனில், மற்றவர்களும் சற்று முயன்று பார்க்கட்டுமே!

3 பின்னூட்டங்களுக்குப் பிறகு, there are no regulations, it becomes a FREE FOR ALL!


1. பல இடத்தில் பிறந்த நதிகள் ஒரு கடலில் வந்து சேரும் ...

2 சித்திரம் பேசும் தத்துவம் ஒன்று, எழுதியவன் எங்கே....

3. கூடியபிறகு குற்றம் காணும் கொள்கையைத் தள்ளுங்கள் ...

4. உன்னை நெஞ்சென்ற மஞ்சத்தில் சந்தித்தேன் ...

5. சிற்றிடை என்பது நூலளவு ...

6. அங்கு நாணங்கள் தூரிகை வண்ணங்களோ முகமென்று அதற்கொரு தலைநகரோ ...

7. ஒளியாய் தோன்றி நிழல் போல் மறைந்தாள் ...

8. இதை அடுத்தவன் சொன்னா கசக்கும்...

9. இயற்கையும் அவள் மேல் காதல் கொள்ளும் ...

10. கரைந்தோடும் நோய் என்னும் பாவங்களே ...

11. பொங்கும் மகிழ்வுடன் மங்கல நாளில் மங்கையை வாழ்த்த வந்தாரோ...

12. நாணமுன்னு வெட்கமுன்னு நாலுந் தான் இருக்குதுங்க ...


என் பழைய நினைவுகளிலிருந்து சுரண்டி எடுத்துப் பதித்ததால், சொற்தவறுகள் இருக்கலாம்! மன்னிக்கவும், திருத்தவும்!


என்றென்றும் அன்புடன்
பாலா
*************************************

8 மறுமொழிகள்:

பாலராஜன்கீதா said...

1. நான் தன்னந்தனிக்காட்டு ராஜா (சிவாஜி நடித்தது)

4. நினைத்தேன் வந்தாய் 100 வயது (காவல்காரன்)

5. அவளுக்கென்ன அழகிய முகம் (சர்வர் சுந்தரம்)

7. பொட்டு வைத்த முகமோ (சுமதி என் சுந்தரி)


இன்னும் சில தெரியும் என்றாலும் அவற்றை மற்ற நண்பர்களுக்காக விட்டு வைக்கிறேன்

G.Ragavan said...

3. தங்கங்களே நாளைத் தலைவர்களே...நம் தேசம் காப்பவர் நீங்கள்.

6. கனவுகளே...ஆயிரம் கனவுகளே...காதல் தேவனின் தூதர்களே

7. பொட்டு வைத்த முகமோ...ஓஒ...கட்டி வைத்த குழலோ

10. இசை கேட்டால் புவி அசைந்தாடும்

11. வசந்தத்தில் ஓர் நாள் மணவறை ஓரம் வைதேகி காத்திருந்தாளோ

நீங்க சொன்னீங்கன்னு...அஞ்சோட நிறுத்திக்கிறேன்.

அபுல் கலாம் ஆசாத் said...

இனிய பாலா,

1.
நான் தன்னந்தனிக் காட்டுராஜா (எங்க மாமா)

4.
நினைத்தேன் வந்தாய் நூறு வயது (காவல்காரன்)

5.
அவளுக்கென்ன அழகிய முகம் (சர்வர் சுந்தரம்)

6.
கனவுகளே ஆயிரம் கனவுகளே
(நீதிக்கு தலைவணங்கு - நா.காமராசன்)

8.
ஓடி ஓடி உழைக்கணும் (நல்லநேரம்)

அஞ்சுதாங்க பதிஞ்சிருக்கேன். தலைவர்தும் சிவாஜிதும் தெரிஞ்சுங்கூட பதில் எழுதலீங்கோவ் :)

ஐட்டம் நம்பர் 7ல 'ஒளியா*கத்* தோன்றி நிழல் போல் மறைந்தாள்'னு இருக்கணுமோ. அந்தப் பாட்டுதான்னா பி.என்.சசிரேகா ஹம்மிங் ஒலிக்குதுங்க காதுக்குள்ள.

அப்பப்ப இப்படிப் பழைய பாட்டுங்களையும் போட்டிங்கன்ன்னா எங்கள மாதிரி ஆள்களும் கலந்துக்குவோமில்ல.

அன்புடன்
ஆசாத்

ச.சங்கர் said...

3.தங்கங்களே...நாலை தலைவர்களே
9.நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைதான்

பரத் said...

9)Naan paartha thi le -Anbe vaa

enRenRum-anbudan.BALA said...

அன்பின் பாலராஜன் கீதா, G ராகவன்,
நீங்கள் கூறிய பல்லவிகள் அனைத்தும் சரி ! மேலும், என் வார்த்தைக்கு மதிப்பளித்து நான்கு/ஐந்து சரணங்களுக்கு மட்டுமே பதில் தந்ததற்கு நன்றி !

அன்பு ஆசாத்,
நீங்கள் கூறிய பதில்கள் அனைத்தும் சரி !
//அஞ்சுதாங்க பதிஞ்சிருக்கேன். தலைவர்தும் சிவாஜிதும் தெரிஞ்சுங்கூட பதில் எழுதலீங்கோவ் :)
//
நன்றி, பாஸ் :)
//ஐட்டம் நம்பர் 7ல 'ஒளியா*கத்* தோன்றி நிழல் போல் மறைந்தாள்'னு இருக்கணுமோ. அந்தப் பாட்டுதான்னா பி.என்.சசிரேகா ?ம்மிங் ஒலிக்குதுங்க காதுக்குள்ள.
//
எங்களுக்கும் தான் !
//
அப்பப்ப இப்படிப் பழைய பாட்டுங்களையும் போட்டிங்கன்ன்னா எங்கள மாதிரி ஆள்களும் கலந்துக்குவோமில்ல.
//
என்ன, இப்படி சொல்லிப்புட்டீங்க ? என்னுடைய "பல்லவியும் சரணமும்" பதிவுகளை (இதோடு சேர்ந்து மொத்தம் 31) பார்த்ததில்லையா தாங்கள் !!! 75% பழைய பாடல்களைத் தான் கேட்டு வந்திருக்கிறேன்.

சங்கர், பரத்,
வருகைக்கு நன்றி !

தற்போது நிலவரம்: 2 (KR விஜயா படம்), 12 (சந்திரபாபு படம்) ஆகியவற்றுக்கான பல்லவிகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை ! விடைகள் நாளை :)

என்றென்றும் அன்புடன்
பாலா

அபுல் கலாம் ஆசாத் said...

இனிய பாலா,

2.
சத்திய ___ கட்டளை இட்டது நாயகன் ஏசுவின் வேதம்!

அன்புடன்
ஆசாத்

enRenRum-anbudan.BALA said...

அன்பு ஆசாத்,
தவறு !
கண்டுபிடிக்கப்படாத பல்லவிகள்:
2. கண்ணே பாப்பா, என் கனிமுத்து பாப்பா !
12. நான் ஒரு முட்டாளுங்க !

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails